மக்கள் ஆதரவுடன் பொலிகண்டியில் கால் பதித்தது எழுச்சிப் பேரணி!

மக்கள் ஆதரவுடன் பொலிகண்டியில் கால் பதித்தது எழுச்சிப் பேரணி!


தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டி மண்ணை சென்றடைந்துள்ளது.


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன், ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வந்துள்ளது.


இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை மக்கள் அணிதிரண்டு வரவேற்றுள்ளனர்.


மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு தமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என இந்த அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வந்துள்ளது.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.