இந்தியாவின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இலங்கையில் தொடரும்! தினேஷ் குணவர்த்தன

இந்தியாவின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இலங்கையில் தொடரும்! தினேஷ் குணவர்த்தன

இந்தியா முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களும், இந்தியாவின் முதலீடுகளும் இலங்கையில் தொடரும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தினை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை சீனா தூண்டிவிட்டது என வெளியாகும் தகவல்கள் குறித்த கேள்விக்கு வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை பலதரப்பட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இந்தியாவின் பாரிய திட்டங்களும் பாரிய முதலீடுகளும் தொடரும் என தெரிவித்துள்ள அமைச்சர் சீனாவிற்கு ஆர்ப்பாட்டங்களில் தொடர்பில்லை நான் அவ்வாறு கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கு கொள்கலன் முனைய திட்டம் கைவிடப்பட்டுள்ளமை இந்தியா இலங்கைக்கு இடையிலான உறவுகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவானவை பல வருட வரலாற்றை கொண்டவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.