மதத்தலைவர்களான தேரர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று கண்டியில் ஆரம்பம்!

மதத்தலைவர்களான தேரர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று கண்டியில் ஆரம்பம்!

corona vaccine for thero

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்று (20) கண்டியில் உள்ள தேரர்கள் குழுவினருக்கு வழங்குவதன் மூலம் மதத்தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் மதத்தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,


இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


இன்றைய தினம் கண்டி மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் பதுளை மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


-சி.எல்.சிசில்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post