முஸ்லிம்களின் உடல்கள் தகனம்; இம்மாதத்திற்குள் சிறந்த முடிவை எதிர்பார்க்க முடியும்! -மனித உரிமைகள் ஆணைக்குழு

முஸ்லிம்களின் உடல்கள் தகனம்; இம்மாதத்திற்குள் சிறந்த முடிவை எதிர்பார்க்க முடியும்! -மனித உரிமைகள் ஆணைக்குழு


நேற்று (19) புதிதாக நியமனம் பெற்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்து யாழ் மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.  


இச்சந்திப்பு யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது. 


இதன்போது, இலங்கையின் அரசியல் யாப்பில், ஒரு சமயத்தை பின்பற்றுபவர்களுக்கு தனிநபருக்கு உரிய உரிமைகள்  மறுக்கக் கூடிய வகையில் உள்ள  ஒரு விடயமாகவே கொரோனாவினால் இறக்கக்கூடிய முஸ்லிம்களின் உடல்களை இறந்தவரின் இறுதி விருப்பத்திற்கு மாறாக தகனம் செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகவே  இருக்கின்றபோது,  இது தொடர்பான முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முஸ்லிம் மற்றும் ஏனைய சிவில் சமூகத்தினரினால் தரப்பட்டிருந்த பொழுதிலும்,  தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று மக்கள் பணிமனை தலைவர் மௌலவி B.A.S சுப்யான் கேள்வி எழுப்பினார். 


இதற்கு இது தொடர்பாக தொடர்ச்சியாக தாங்கள் அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும்,  இம்மாத இறுதிக்குள் சிறந்த முடிவு ஒன்றை எதிர்பார்க்க முடியும் என்றும் இது தொடர்பாக உரிய தரப்பினர்களினால் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்களும் அதை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டனர்.  இது தவிர வேறு பல விடயங்களும் இவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


-மௌலவி B. A. S சுப்யான்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.