சர்வதேச மன்னிப்புச்சபையினால் பாகிஸ்தான் பிரதமருக்கு எழுதிய பகிரங்க மடலின் தமிழாக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச மன்னிப்புச்சபையினால் பாகிஸ்தான் பிரதமருக்கு எழுதிய பகிரங்க மடலின் தமிழாக்கம்!


சர்வதேச மன்னிப்புச்சபையினால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவரது இலங்கை விஜயம் தொடர்பாகவும் கட்டாய தகனம் குறித்தும், அதன் பதில் செயலாளர் நாயகம் ஜூலி வெர்ஹார் இனால் எழுதப்பட்டுள்ள பகிரங்க மடலின் தமிழாக்கத்தினை கீழே காணலாம்.


அன்புள்ள பிரதமர் இம்ரான் கான்,


விடயம்: இலங்கையில் முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறுதல்.


பிப்ரவரி 22, 2021 அன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு தாங்கள் மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ அரசு விஜயம் மற்றும் 2021 பிப்ரவரி 24 அன்று திட்டமிடப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் உங்கள் உரை குறித்தும் இலங்கை  மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கங்கள் நீண்டகால நட்பு நாடுகளாக இருந்து வருகின்றமையை கருத்தில் கொண்டும் இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பால் கொண்ட அக்கறையிலும் நான் உங்களுக்கு இதனை  எழுதுகிறேன்.


அதிலும் விசேடமாக 20 அக்டோபர் 2020 அன்று  முஸ்லிம் அல்லாத நாடுகளில் வளர்ந்து வரும்  இஸ்லாமோபோபியாவை (இஸ்லாம் மீதான வெறுப்பு ) எதிர்கொள்ள முஸ்லிம் நாடுகள் செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தங்களால் எழுதப்பட்ட கடிதத்தின் வெளிச்சத்தில் இந்தப் பிரச்சனையை வெளிக்கொணர்கிறோம்.


பிரத்தியகமாக எங்கள் கரிசனையானது கொரோனாவினால் இறந்த அல்லது இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களை கட்டாய தகனம் செய்ய வேண்டும் என்ற கொள்கையை இந்த அரசாங்கம் அமுல் நடாத்தியிருப்பது பற்றியதாகும்.


ஆரம்பத்தில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலானது கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் இரண்டையும் அனுமதித்திருந்தது. இதுவே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு , உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல் நிபுணர் குழுக்கள் மற்றும் பிற நிபுணர் அமைப்புகள், என்பனவற்றின் நிலைப்பாடுமாக இருந்தது.


முஸ்லீம் சமூகத்தின் மீது அளவிட முடியாத  மனக்கிலேசத்தை ஏற்படுத்தியுள்ள தன்னிச்சையானதாக  தென்படுகின்ற  இந்த கொள்கையின் பின்னாலுள்ள ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களை இலங்கை அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.


இஸ்லாமிய விழுமியங்களின்படி ஒரு நபரின் இறுதிக் கிரியைகளில் அடக்கம்செய்தல் முக்கியவொரு பகுதியாக இருப்பதால், கட்டாய தகனங்கள் அநீதியாகவும் மத உரிமைகளுக்கெதிரான வேண்டத்தகாத அத்துமீறலாகவும் கொள்ளப்படுகின்றன  

இந்த கட்டாய தகனக் கொள்கையை ஐ.நா நிபுணர்கள் பாரபட்சமான, தீவிரமான தேசியவாதமாக, இனவாதத்தை மையமாகக் கொண்ட   முஸ்லிம்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தினரையும் துன்புறுத்தும் அளவுக்கு மோசமான மனித உரிமை மீறல் என்று வகைப்படுத்தியுள்ளனர்.


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை கட்டாயமாக தகனம் செய்வது உள்நாட்டு சட்டத்துக்கும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் முரணானதாகும்.

இலங்கையின் அரசியலமைப்பு, குறிப்பாக உறுப்புரைகள் 10 மற்றும் 12 ஆகியவை  மத சுதந்திரம், மற்றும் மதத்தின் அடிப்படையில் பாராட்சம் காட்டப்படாமை என்பனவற்றினை வெளிப்படையாக பாதுகாக்கின்றன.


மேலும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச உடன்படிக்கையை (ICCPR), இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் தான் விரும்பிய மதக் கிரியைகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளது என்பதை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.


$ads={1}


மாண்புமிகு பிரதமரே, உங்களின் இலங்கை விஜயத்தின் போது தமது உரிமைகளை வெற்றிகொள்ளும் வழிவகைகள்  அற்று பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தின் பக்கம் கொண்ட அக்கறையுடன் கட்டாய தகனம் பிரச்சினையை  சாத்தியமான மிக உயர்ந்த மட்டத்தில் எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கட்டாய தகனங்களை நிறுத்தவும், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் இலங்கை அரசுக்கு அழைப்பு விடுங்கள்.


உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக தகவல்களை வழங்க நாங்கள் உளமாற காத்திருக்கிறோம்.


தங்கள் உண்மையுள்ள,

ஜூலி வெர்ஹார்

பதில் பொதுச் செயலாளர்



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.