ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை விடுதலைப் புலிகளை தியாகிகளாக்கும் விதத்தில் உருவாக்கியுள்ளது! -நேஸ்பி பிரபு

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை விடுதலைப் புலிகளை தியாகிகளாக்கும் விதத்தில் உருவாக்கியுள்ளது! -நேஸ்பி பிரபு


பிரிட்டன் அரசியல்வாதி நேஸ்பி பிரபு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளதுடன் அறிக்கையின் தொனி விடுதலைப் புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் விதத்தில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை என பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர் மைக்கல் மோரிஸ் பாரோன் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.


ஜனவரி 2009 முதல் மே 2009 முதல்வரை 5,000 முதல 7,000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பதற்கான சுயாதீன மாக நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்கள் உள்ளன என்பது உட்பட பல முக்கிய விடயங்களை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் முன்வைக்கும் கட்டுக்கதை போல 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்த மிக மோசமான யுத்த குற்றத்தினை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={1}


மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் சிறுவர்கள் என UNICEF தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


சிறுவர்களை படையணியில் இணைப்பது பயிற்சி வழங்குவது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் பிரிட்டனில் வாழும் அடெய்ல் பாலசிங்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரிட்டன் ஏன் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு ஐநாவை கேட்கவில்வை என கேள்வி எழுப்ப வேண்டும் என நேஸ்பி பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.