இலங்கை - பாகிஸ்தான் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஐந்து உடன்படிக்கைகள்!

இலங்கை - பாகிஸ்தான் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஐந்து உடன்படிக்கைகள்!


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.


அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.


பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் உள்ளிட்ட தூதுக்குழு பாகிஸ்தான் பிரதமருடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளைய தினம் (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.


அதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் வீரர்களையும் சந்திக்கவுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.