அனைத்து தௌஹீத் அமைப்பும் பொதுபல சேனா அமைப்பையும் தடை செய்தல் வேண்டும்! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக PCoI யின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

அனைத்து தௌஹீத் அமைப்பும் பொதுபல சேனா அமைப்பையும் தடை செய்தல் வேண்டும்! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக PCoI யின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!


வஹாப் வாதம், அனைத்து தௌஹீத் அமைப்புகள், PEACE டிவி மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைத்தல், பொதுபல சேனா அமைப்பை தடை செய்யவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.


இலங்கையில் தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பல பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை இன்று (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.


இதில் வஹாப் வாதத்தையும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தௌஹீத் அமைப்புகளையும் தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.


மேலும் நாட்டில் PEACE டிவியை தடை செய்யவும், ஒளிபரப்பாகும் மத சார்புடைய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை கண்காணிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


$ads={1}


அதேநேரம், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணிகளை அணிய தடை விதிக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட மேலும் சில பரிந்துரைகள் கீழே காணலாம்.


  1. மத அடையாளங்களுடன் காணப்படும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.
  2. பொதுபல சேனா அமைப்புக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
  3. அனைத்து குடிமக்களும் அவ்வப்பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  4. அனைத்து அரசு நிலங்களையும் தணிக்கை செய்வதற்கும், சட்டவிரோதமாக வசிப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கும் ஜனாதிபதி பணிக்குழு ஒன்றை நியமித்தல்.
  5. மாநில புலனாய்வு சேவையில் சர்வதேச பகுப்பாய்வு பிரிவைத் தொடங்குதல்.
  6. ஜமாஅத் இ இஸ்லாம் மற்றும் ஜமாஅத் இ இஸ்லாம் மாணவர் இயக்கம் ஆகியவற்றை தடை செய்தல் வேண்டும்.
  7. இலங்கையில் பாதுகாப்பு அனுமதி இல்லாமல் எந்த வெளிநாட்டினரும் வேலை செய்ய அனுமதிக்கப்பட அனுமதிக்க கூடாது.
  8. மத தீவிரவாதத்தைத் தடுக்க சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துதல்.


-எம்.எம் அஹ்மத்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.