முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!


முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படும் விவகாரத்தை, பாகிஸ்தான் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கொழும்பில் இன்று (23) கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த போராட்டம், கட்டாய தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என நிபுணர் குழுவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


$ads={1}


அத்துடன், சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post