நாட்டில் பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டு சேர்ந்தனர் - அதிகரிக்கும் அரிசி விலை

நாட்டில் பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டு சேர்ந்தனர் - அதிகரிக்கும் அரிசி விலை

இந்த பருவத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் விலையை கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட விலையை தீர்மானிக்கவும் பொலனறுவையில் உள்ள மூன்று முக்கிய அரிசி வர்த்தகர்கள் ஒரு சிறப்புக் ஒன்று கூடலை நடத்தியுள்ளனர்.

இவ்வொன்று கூடலிற்கு நாட்டின் 10 நெல் உற்பத்தி செய்யும் மாவட்டங்களிலும் இருந்தி முதல் 10 பிரதிநிதிகளும் வரவழைக்கப்பட்டனர்.

மாவட்ட ரீதியில், பிரதான ஆலை உரிமையாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் இனை கொள்வனவு செய்ய 10 பிராந்திய முகவர்களை நியமிக்கவும், அவர்களுக்கு மாதாந்தம் ரூ. 75,000 சம்பளம் வழங்கவும், தங்கள் சொந்த விலைக் கட்டுப்பாட்டு முறையை அமைக்கவும் முடிவு செய்தனர்.

மூன்று பிரதான ஆலை உரிமையாளர்களிடையே எந்த போட்டியும் இல்லாமல் நெல் விலையை கட்டுப்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலையை ஒரு கிலோவுக்கு ரூ.96 இல் இருந்து ரூ. 100 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்க ரூ. 1600 கோடி நிதி அமைச்சினால் கடந்த வாரம் ஒதுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post