பயணி ஒருவருக்கு ரூ. 100, ரூ. 200, ரூ. 500 வரை அபராதம்! - அமுலாகவிருக்கும் அதிரடி சட்டம்!
advertise here on top
advertise here on top

பயணி ஒருவருக்கு ரூ. 100, ரூ. 200, ரூ. 500 வரை அபராதம்! - அமுலாகவிருக்கும் அதிரடி சட்டம்!

கொரோனா நோய் பரவலை எதிர்கொண்டுள்ள மத்திய மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்த பிரச்சினை குறித்து மத்திய மாகாண ஆளுநர் வழக்கறிஞர் லலித் யூ கமகேவின் தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலக கேட்போர்கூடத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மேலும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண போக்குவரத்து ஆணையம் ஒன்றிணைந்து செயல்பட்டு பயணிகள் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கு அசாதாரணங்கள் ஏற்படாது செயல்படும் விதம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண போக்குவரத்து ஆணையம் ஒன்றிணைந்து வரும் 07 நாட்களில் கூட்டு திட்டம் ஒன்றினை அமல்படுத்த ஆளுநர் அறிவுருத்தினார்.

பஸ் பயணிகளுக்கு தொடர்ந்து ஏற்படும் சிரமங்கள் குறித்து தனக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இந்த கலந்துரையாடல் அவசர மற்றும் விரைவாக கூட்டப்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

தற்போது கொரோனா பரவலடைந்த நிலையில், பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்கையில் மூன்று சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க மத்திய மாகாண  பயணிகள் போக்குவரத்து ஆணையம் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, முதல் சந்தர்ப்பத்தில் அபராதமாக அங்கீகரிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட மேலதிக ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 100 உம் இரண்டாவது சந்தர்ப்பத்தில் ரூ. 250 உம், மூன்றாவது சந்தர்ப்பத்தில் ரூ. 500 விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு மூன்றாவது சந்தர்ப்பத்தில் பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)

- எம். ஐ. மொஹமட்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.