யார் என்னை விமர்சித்தாலும் எனது நடைமுறையொன்றின் கீழே பணியாற்றுவேன்! -ஜனாதிபதி

யார் என்னை விமர்சித்தாலும் எனது நடைமுறையொன்றின் கீழே பணியாற்றுவேன்! -ஜனாதிபதி


எவர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தனது நடைமுறையின் கீழ் மாத்திரமே கடமையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல – திக்வெல்ல பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நான் பிரதேசசபை தேர்தல் ஒன்றில் கூட போட்டியிடாமலேயே ஜனாதிபதியாகியுள்ளேன். மக்களின் கோரிக்கைக்கு அமையவே தெரிவாகியுள்ளேன். பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் என்னால் முன்னெடுக்கப்பட்ட பணிகளை பார்த்து மக்கள் என்னை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

கிராமங்களுக்கு செல்வது ஏன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதிகாரிகளிடம் கேட்க முடியும் அல்லவா என கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறும் முடியும். எனினும், என்னுடைய நடைமுறை அது கிடையாது. யார் என்னை விமர்சித்தாலும், நான் எனது நடைமுறையின் கீழ் மாத்திரமே பணியாற்றுவேன்" என ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.