கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஏன் எம்மால் வழங்க முடியவில்லை! இந்திய தூதுவரிடம் விளக்கம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஏன் எம்மால் வழங்க முடியவில்லை! இந்திய தூதுவரிடம் விளக்கம்!


அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாத்திரமல்லாது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர அனுசரணை வழங்கிய சக்திகளில் 99 வீதமானவர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்ப்பதால், அந்த தீர்மானத்தை இரத்துச் செய்ய நேரிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிற்கு அறிவித்துள்ளார்.


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவிக்க இந்திய தூதுவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்துள்ளார்.


இரண்டு நாடுகள் கையெழுத்திட்ட உடன்படிக்கையை இலங்கை ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்தமைக்கான நியாயமான காரணத்தை இந்திய அரசாங்கத்திற்கு தன்னால் விளக்குவது சிரமமாக உள்ளதாகவும் இந்திய தூதுவர் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் இந்தியாவுக்கு வழங்காத துறைமுகத்தின் கிழக்கு முனையம் வேறு ஒரு பலமிக்க நாட்டுக்கு வழங்கப்படுமா எனவும் இந்திய தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இவை அனைத்துக்கு பதிலளித்துள்ள அரசாங்கத்தின் பிரதானிகள், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கினாலும் அதனை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல தொழிற்சங்கங்களின் உதவி கிடைக்காது எனக் கூறியுள்ளனர்.


இதனால், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 வீத பங்குகளை பெற்றுக்கொண்டு அதனை அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதியும், பிரதமரும், இந்திய தூதுவரிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.