முடக்கப்பட்ட .LK வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பப்பட்டுள்ளது!

முடக்கப்பட்ட .LK வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பப்பட்டுள்ளது!


இலங்கையின் LK Domain பதிவுத் தளம் மற்றும் google.lk உள்ளிட்ட இணையத்தளங்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் சீர் செய்யப்பட்டு தற்போது அவை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த சைபர் தாக்குதலில் உள்நாட்டில் பதிவாக்கப்பட்டுள்ள, google.lk இணையத்தளத்திற்கு செல்லும் நிலையில் அது மற்றுமொரு, இனந்தெரியாத இணையத்தளத்திற்கு செல்லும் நிலை உருவானது.


குறித்த அடையாளம் காணப்படாத இணையத்தளத்தில் தோட்டத் தொழிலாளர்களின் ரூ. 1,000 அடிப்படைச் சம்பள பிரச்சினை, சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உடல் தகனம் உள்ளிட்ட அரசியல், பொருளாதார, இன, மத ரீதியான பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டிருந்நது.


அத்துடன் இச்சம்பவத்தில், LK (.lk) முடிவைக் கொண்ட சுமார் 10 இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டதாக, LK Domain பதிவுத் தளத்தின் பதிவாளர், பேராசிரியர் கிஹான் டயஸ் குறித்த உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முற்பகல் 8.30 மணியளவில் சீர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் LK DNS தொகுதி வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தொகுதிக்கு வெளியே தற்காலிக (cache) தரவாக சேமிக்கப்பட்டுள்ள சில தரவுகள் இன்னும் google.lk தேடலில் google.lk எனத் தேடும்போது காணப்படுவதாகவும், குறித்த cache தரவுகள் காலவதியாகும் வரை அது அவ்வாறு காணப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.