பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நிலையில் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நிலையில் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!


பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் பொழுது பழைய சுற்றறிக்கைகளின்படி அல்லாது, மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாடசாலை அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


பாடசாலைகளை மீளத் ஆரும்பிப்பது நாட்டின் பொதுவான சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதினால், பழைய சுற்றறிக்கையின் அடிப்படையில் செயற்பட தேவையில்லை என்பதாகவும், மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்கி நடைமுறையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த 30 ஆம் திகதி மினுவங்கொடை வலயக் கல்வி காரியாலயத்தில் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக அதிபர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மினுவங்கொடை கல்வி வலயத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டலுக்கு அமைவாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தினால் ரூபா 95 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறியும் கருவி, கை கழுவுவதற்கு தேவையான வசதிகள் மற்றும் கிரிமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


அத்துடன் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விடயங்களுக்கும் அரசு உடன்படுவதாகவும், அந்தந்த பாடசாலைகளில் நிலைமைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பொறுப்பு அதிபர்களுக்கு உண்டு என்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இந்த கலந்துரையாடலின் போது அதிபர்கள் தமது பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் ஏற்படும் சிக்கல்களை அமைச்சருக்கு முன்வைத்தனர்.


அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு அவற்றிற்கு மிக விரைவான முடிவுகளை பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.