சமூக ஊடகங்களில் வெளியான ஆயுர்வேத சிக்கரட்களை தடை செய்ய தீர்மானம்!

சமூக ஊடகங்களில் வெளியான ஆயுர்வேத சிக்கரட்களை தடை செய்ய தீர்மானம்!

ஆயுர்வேத சிக்கரட் வகையொன்று சந்தைக்கு வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தனது அலுவலகத்தினூடாம குறித்த உற்பத்தியாளருக்கு இதனை நிறுத்துமாறு கடிதம் ஒன்று அனுப்பபப்ட்டுள்ளாக தேசிய புகையிலை மற்றும் ஆல்கஹால் ஆணையத்தின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்

குறித்த சிகரெட் உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பு என்பது தேசிய புகையிலை மற்றும் ஆல்கஹால் ஆணையத்தின் சட்டத்தை மீறும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

சிகரெட்டைப் போன்ற எந்தவொரு பொருளையும் புகையிலை இல்லாமல் கூட உற்பத்தி செய்யவோ ஊக்குவிக்கவோ சட்டம் அனுமதிக்காது என்று கூறிய டாக்டர் ராஜபக்ஷ, இதுபோன்ற சிகரெட் உற்பத்திக்கு முன்கூட்டியே சில ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆயுர்வேத தயாரிப்பு என்று கூறப்படும் கருவாப்பட்டையினை அடிப்படையான சிகரெட் வகையின் பெயர் குறித்து ஆயுர்வேத மருத்துவத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயுர்வேத தயாரிப்பு எனக் கூறப்படும் புதிய சிக்கரட் வகை இலங்கையில் பிரபலமான சிகரெட் பிராண்டுகளுடன் தொடர்புடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய பொருட்களின் பெருக்கம் இளைஞர்களிடையே புகைப்பழக்கத்தைத் தூண்டக்கூடும் என்றும், நாடு முழுவதும் இதை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

-எம். ஐ. மொஹமட்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.