அனைத்து மாகாணங்களிலும் மின் உற்பத்தி நிலையங்கள்!

அனைத்து மாகாணங்களிலும் மின் உற்பத்தி நிலையங்கள்!

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் எதிர்காலத்தில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் நேற்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு கூடியது. 

சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கல் சமர்ப்பணத்தை தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சமந்த விஜேசிரியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் நீண்டகாலமாக மக்கள் மின்சாரம் இன்றி உள்ளனர். இவர்களுக்கு மின்சாரத்தை வழங்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காரணியாகும். அதற்காக சர்வதேச ஒப்பந்த முறைமைகளின் பிரகாரம் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்காக முன்வந்துள்ளது.

இங்கு மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான முதலாவது ரெண்டர் அழைப்பு தோல்வியுற்றது. மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் இந்த ஒப்பந்தங்களை செய்ய தமது திட்டங்களை சமர்ப்பித்திருந்தன. இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னமும் அமைச்சரவைக்கு சமர்பிபக்கப்படவில்லை.

நுரைச்சோலை மின் நிலையம் அமைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அவர் கட்டிய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இல்லாதிருந்தால் கடுமையான மின்சார நெருக்கடிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் என்றார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post