மோட்டார் சைக்கிளை திருடிய நபர் மோட்டார் சைக்கிளுடன் கைது! - மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்பு!
advertise here on top
advertise here on top

மோட்டார் சைக்கிளை திருடிய நபர் மோட்டார் சைக்கிளுடன் கைது! - மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்பு!

மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட சந்தேக நபரொருவர் குறித்த மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மஹரகம பொலிஸாரால் 44 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பன்னிப்பிட்டிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில் வசிப்பவராவார். மீகொட பொலிஸ் பிரிவில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பொரல்லஸ்கமுவ, பிலியந்தல, பமுனுகம, அத்துருகிரிய மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் தங்க சங்கிலிகள் கொள்ளையிடப்பட்ட 10 சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது. இதன் போது கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மை காலமாக வீதிகளில் சென்று கொண்டிருப்பவர்களின் தங்க சங்கிலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவை கொள்ளையடிக்கப்படுகின்றமை அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பாவனையாளர்களாலேயே இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரும் போதைப்பொருள் பாவனையாளராவார். மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறிருப்பினும் மோட்டார் சைக்கிள்களை தரித்து நிறுத்தும் போது மிகவும் பாதுகாப்பாக இடங்களில் நிறுத்துமாறும், தங்க ஆபரணங்கள் அணிந்து செல்லும் பெண்கள் இரவு வேளைகளில் தனி பாதைகளில் செல்வதைத் தவிர்த்துக் சன நடமாட்டமுள்ள பாதைகளில் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
-Virakesari

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.