கொரோனா : முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார சற்று முன் காலமானார்!

கொரோனா : முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார சற்று முன் காலமானார்!

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார சற்று முன் காலமானார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கடந்த சில தினங்களாக கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தனது 80வது வயதிலேயே இன்று (14) காலமானார்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி முதல் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தின் 18வது சபாநாயகராக அவர் கடமையாற்றியிருந்தார்.

1941ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஹப்புத்தளை பகுதியில் அவர் பிறந்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற பிரவேசத்தை 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர், சப்ரகமுவ மாகாண ஆளுநர், சபாநாயகர் என பல்வேறு பதவிகளை டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார வகித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.