ஜனாதிபதி 15 மணிநேரம் பணியாற்றுகிறார்! உண்மையை கூற வேண்டுமாயின் நான் வேலை செய்வதில்லை! -பிரதமர் தெரிவிப்பு

ஜனாதிபதி 15 மணிநேரம் பணியாற்றுகிறார்! உண்மையை கூற வேண்டுமாயின் நான் வேலை செய்வதில்லை! -பிரதமர் தெரிவிப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 15 மணிநேரம் சேவையாற்றுகின்றார் நான் கூட அவ்வளவு நேரம் பணி புரிந்ததில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ரூபாய் 14 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளை கொண்ட பேருவளை பிரதேச சபையின் பல்நோக்கு கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அங்கு பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று ஓராண்டு என்ற குறுகிய காலமேயாகிறது. அந்த காலப்பகுதியிலும் நான்கு மாதங்கள் போன்ற காலமே அரசாங்கத்தை செயற்படுத்த முடிந்தது. ஏனைய காலப்பகுதி குறித்து புதிதாக எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.


விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 15 மணிநேரம் சேவையாற்றும் தலைவராவார். உண்மையை கூற வேண்டுமாயின் நான் வேலை செய்வதில்லை. எனினும், அவர் இந்த அனைத்து நிறுவனங்கள் தொடர்பில், உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் ஒரு புரிதலுடனேயே தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார். அதனால் நாம் அதன்மூலம் நன்மையடைய வேண்டும்.


அரசாங்கமொன்றை அமைத்து அந்த அரசாங்கத்தின் ஊடாக அனுகூலங்களை பெறுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என நான் கருதுகிறேன். அவ்வாறு இன்றி அமைச்சர்களை நியமித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்து, சபையொன்றை கட்டியெழுப்பி, உறுப்பினர்களை நியமித்துவிட்டோம் இனி வேலை நடக்கும் என நாம் ஒதுங்கிவிட்டால் அதனால் பாதிப்பே எஞ்சும்.


அதனால் தாம் நியமிக்கும் உறுப்பினர், தலைவரை, தமது அரசியல் தலைவராக நியமித்துக் கொண்டதன் பின்னர் அவர்களை கொண்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது உங்களது கடமையாகும். அதனை செய்யும் உரிமை உங்களுக்குள்ளது. அந்த உரிமையை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.


தமது பிரதேசம் அபிவிருத்தியடைந்தால் தான் சுற்றியுள்ள ஏனைய பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். அதனால் இவ்விடத்திற்கு வருகைதந்து இந்நடவடிக்கையியல் தொடர்புபட முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.