இதுவரை நாடளாவிய முடக்கம் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளவில்லை! -இராணுவத் தளபதி

இதுவரை நாடளாவிய முடக்கம் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளவில்லை! -இராணுவத் தளபதி

Shavendra Silva Yazh news

புதிய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாட்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


புதிய கொரோனா வைரஸ் பரவல் இலங்கையின் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில், நாடளாவிய ரீதியில் முடக்கலை மேற்கொள்ள தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.


இந்த புதிய கொரோனா வைரஸ் பரவல் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.


பிரித்தானியாவில் பரவிய இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக இந்த ஆண்டிலேயே இலங்கைக்குள் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் தொற்று சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய இடங்களிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.


பி.1.258 என்ற வர்க்கத்தைச் சேர்ந்த இந்த புதிய வைரஸ் அதிகப்பரவல் தன்மையை கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.