நாட்டில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு! காரணத்தை வெளியிட்ட பொலிஸார்!

நாட்டில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு! காரணத்தை வெளியிட்ட பொலிஸார்!

நாட்டில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களினால் இவ்வாறு உள்நாட்டு சந்தையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் ஐஸ் போன்ற சின்தட்டிக் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

$ads={1}

சுங்கத் திணைக்களம், கடற்படை, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 24 பேருக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.