ஜனாஸா அடக்கம் தொடர்பாக வெளியான வர்த்தமானி குறித்து முஸ்லிகள் கொண்டாட வேண்டிய அவசியமில்லை! -அசாத் சாலி

ஜனாஸா அடக்கம் தொடர்பாக வெளியான வர்த்தமானி குறித்து முஸ்லிகள் கொண்டாட வேண்டிய அவசியமில்லை! -அசாத் சாலி

கொரோனா தொற்றினால் மரணித்ததாக குறிப்பிட்டு இலங்கையில் இதுவரை 350க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கூறியதாவது,

சர்வதேச அழுத்தம் காரணமாகவே, இலங்கை அரசாங்கம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாமென தற்போது அறிவித்துள்ளது. 

வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமைக்காக அதை எவறும் கொண்டாட வேண்டிய தேவையில்லை. நிபுந்தனையுடன்தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் உரிமையை அபகரித்துவிட்டு அதில் கொஞ்சத்தைதான் தற்போது தந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளது. 

$ads={1}

இதில் 350 க்கும் 380 க்கும் இடையிலான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளதென்ற தகவலும் கிடைத்துள்ளது என மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.