பல்கலைக்கழகங்களுக்கு இணைய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

பல்கலைக்கழகங்களுக்கு இணைய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!


இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு 10,579 மாணவர்களை மேலதிகமாக இணைத்துக்கொள்வதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


$ads={1}


அதன்படி மருத்துவ பீடத்திற்கு 481 மாணவர்களையும், பொறியியல் பீடத்திற்கு 565 மாணவர்களையும், தொழில்நுட்ப கல்வி பிரிவிற்கு 1,099 மாணவர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


அதேபோல், விவசாயம் மற்றும் வணிகப்பிரிவிற்கு 1,803 மாணவர்களையும், கலைப்பிரிவிற்கு 1,680 மாணவர்களையும், அழகியல் சார் கல்வி பிரிவிற்கு 318 மாணவர்களையும் மேலதிகமாக இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post