மதுரங்குளி பகுதி மத்ரஸா அதிபரை கைது செய்ய சட்டமா அதிபர் சிஐடிக்கு ஆலோசனை!

மதுரங்குளி பகுதி மத்ரஸா அதிபரை கைது செய்ய சட்டமா அதிபர் சிஐடிக்கு ஆலோசனை!


சதித்திட்டம்‌ தீட்டியமை மற்றும்‌ இனங்களுக்கிடையில்‌ முறுகலை ஏற்படுத்தும்‌ வகையிலான நடவடிக்கை தொடர்பில்‌ சட்டத்தரணி ஹிஜாஸ்‌ ஹிஸ்புல்லாஹ்வுக்கு உதவியதாக இருந்ததாக கருதப்படும், மதுரங்குளி பகுதியில்‌ நடத்திச்‌ செல்லப்பட்ட மத்ரஸா பாடசாலை ஒன்றின்‌ அதிபரைக்‌ கைது செய்ய சட்ட மா அதிபர்‌ சிஜடியினருக்கு ஆலோசனை வழங்‌கியுள்ளார்‌.

மொஹம்‌மட்‌ ஷக்கீல்‌ எனப்படும்‌ குறித்த அதிபரை கைது செய்து, ஹிஜாஸ்‌ ஹிஸ்புல்லாஹ்‌ மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்‌ தடை சட்டம்‌, சர்வதேச அரசியல்‌, சிவில்‌ உரிமைகளுக்கான இணக்கப்பாட்டு சட்டத்தின்‌ கீழான குற்றச்சாட்டுக்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டில்‌ நீதிமன்றில்‌ ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் இந்த ஆலோசனைகளை வழங்‌கியுள்ளதாக சட்ட மா அதிபரின்‌ செய்தித்‌ தொடர்பாளர்‌ அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்‌.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post