பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம்! சபாநாயகர் கோரிக்கை!

பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம்! சபாநாயகர் கோரிக்கை!

speaker mahinda yapa

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.


பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லை​​யெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை தொடர்பில் 24 ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.