இலங்கையில் புதிய முறையில் இலட்சக்கணக்கில் பணமோசடி!! எச்சரிக்கையாக இருங்கள்!

இலங்கையில் புதிய முறையில் இலட்சக்கணக்கில் பணமோசடி!! எச்சரிக்கையாக இருங்கள்!


இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய பண மோசடிகள் இடம்பெற்று வரும் நிலையில், முகநூல் மூலம் நண்பர் ஆக ஒருவர் REQUEST அனுப்பி நம்முடைய வாட்ஸாப் இலக்கத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் வசிப்பவர் போலும் நல்ல நெருங்கிய நண்பர் போலும் பேசி உங்களுக்கு ஒரு பரிசு பொதி அனுப்புகின்றேன் என தெரிவித்து ஏமாற்றி பணம் சூறையாடும் யுக்தி ஒன்று கையாளப்பட்டு வருகின்றமை அறியக்கிடைத்துள்ளது.


குறித்த அந்த பதிவில் எங்கள் நாட்டில் கோடிக் கணக்கு மதிப்புள்ள வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், அதனுடன்தொலைபேசி முதலான விலை மதிப்புள்ள ஏனைய பொருட்களும் இருப்பதாக கூறி அதன் படங்கள் முதலான இணைப்புகளையும் உங்களுக்கு அனுப்பி வைப்பர்.


பின்னர் உங்கள் நாட்டு தூதரகத்திலிருந்து (EMBASSY)  தகவல்கள் கூறப்படுவது போல அழைப்பு விடுத்து பேசி உங்களின் பரிசை பெற்றுகொள்ள குறித்த தொகை பணத்தை குறித்த வங்கியில், ஒரு நபரின்(ACC NO) கணக்கு இலக்கத்தை வழங்கி, பணத்தைஅந்த கணக்கில் வைப்பிலிடுமாறு கூறி பணம் மோசடி செய்கின்றனர்.


$ads={1}


இலட்ச கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட உண்மையான செய்தி இது. கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை அனுப்பிய ஏமாற்றுகின்றனர்.


இத்தகவல்களை பகிர்ந்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். எச்சரிக்கையாக இருங்கள்!

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.