இது பௌத்த நாடு! ஏனைய மதத்தவர்கள் செய்வதையெல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இது பௌத்த நாடு! ஏனைய மதத்தவர்கள் செய்வதையெல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சிங்கள மக்கள் போராட்டம் நடத்தும் போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் இவ்வாறு பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

குறித்த பேரணி இடம்பெற்ற இடத்தில் தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன்.

நாட்டில் அனைவரும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்கள் இது குறித்து விழிப்புடன் இருங்கள். இதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். யார் என்னை தடுக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் ராஜபக்ஷர்கள் தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனினும், அவர்கள் செய்வதையெல்லாம்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.