இலங்கை மற்றும் நேபாளத்தின் ஆட்சி; அமித் ஷாவின் கருத்துக்கு இந்திய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

இலங்கை மற்றும் நேபாளத்தின் ஆட்சி; அமித் ஷாவின் கருத்துக்கு இந்திய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!


இலங்கையிலும் நேபாளத்திலும் ஆட்சியமைப்பதற்கு இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிட்டுள்ளதாக வௌியாகியுள்ள கருத்து தொடர்பில் இந்திய எதிர்கட்சிகள் தமது விமர்சனத்தை வௌியிட்டுள்ளன.


இந்தியாவின் மாநிலங்களில் தமது ஆட்சியை ஸ்தாபித்ததன் பின்னர் இலங்கை மற்றும் நேபாளத்திலும் தமது ஆட்சியை ஸ்தாபிக்கப் போவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லப் குறிப்பிட்டிருந்தார்.


அமித்ஷாவின் இந்த கருத்து வெளிநாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை பிரதிபலிப்பதாக இந்திய கம்பியூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


அத்துடன் இந்திய அரசியலமைப்பு குறித்த புரிதலின்றி இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.


எவ்வாறாயினும் இந்திய உள்துறை அமைச்சர் நேபாள அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி தமக்கு எழுந்துள்ளதாகவும் எனவே இந்த விடயம் குறித்து இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் பதிலளிக்க முன்வர வேண்டும் என இந்திய கம்பியூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


மேலும் நேபாளம் மற்றும் இலங்கையின் இறைமையில் இந்திய தலையிட முடியாது என திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.