
பலங்கொட - எல்லபொல எனும் பகுதியில் நேற்று (03) இனம் தெரியாத ஆண் கொள்ளையர்கள் இருவர் வயோதிப பெண்ணொருவரின் மோதிரத்தை திருட விரலை வெட்டியதால் அவர் காயமடைந்துள்ளார்.
குறித்த இரண்டு கொள்ளையர்களும் அந்த வயோதிப பெண்ணை அவரது இல்லத்தில் வைத்து தாக்கிவிட்டு மோதிரத்தை திருடிக்கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், 83 வயதான அந்த வயோதிப பெண் அவரது வீட்டில் தனியாக வசிப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் எல்லபொல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களின் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கயிறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.