நான் எவருடனும் நாட்டை விட்டு வெளியேறவில்லை! விமல் வீரவன்சவின் மனைவி சி.ஐ.டியில் புகார்!

நான் எவருடனும் நாட்டை விட்டு வெளியேறவில்லை! விமல் வீரவன்சவின் மனைவி சி.ஐ.டியில் புகார்!


அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, அவர் தொடர்பான போலி செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சி.ஐ.டி) இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.


சஷி வீரவன்ச ஓர் பிரபல தொழிலதிபருடன் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறி வெளியான செய்தி போலியானது என தெரிவித்தே இந்த புகார் அளிக்கப்பட்டது.


தனது கட்சிக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவதால், சிஐடியிடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சஷி வீரவன்ஸவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, ​​அரசியல் விடயங்களில் தன்னை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு சஷி வீரவன்ச ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.