தகவல்கள் வழங்காத பள்ளிவாயல்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி தீர்மானம்!

தகவல்கள் வழங்காத பள்ளிவாயல்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி தீர்மானம்!


பள்ளிவாயல்கள் எதிர்நோக்கும் பல்வேறு சட்டப் பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றுள் மிகப் பிரதானமானது பள்ளிவாயல்கள் அமைந்துள்ள காணி உட்பட பள்ளிக்குச் சொந்தமான அசையா சொத்துகளை உத்தரவாதப்படுத்தும் சட்டமுறையான ஆவணங்கள் காணப்படாமையை குறிப்பிடலாம்.


இவ்வகையில் வக்பு சபையின் வழிகாட்டலின் கீழ் பள்ளிவாயல்களின் அசையாச் சொத்துக்கள் பற்றிய கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,350 பள்ளிவாயல்களுள், 1683 மாத்திரமே இதுவரையில் தகவல்கள் வழங்கி பதிலளித்துள்ளன. ஏனைய பள்ளிவாயல்கள் தமது தகவல்களை தருவதில் தயக்கம் காட்டுகின்றன.


தகவல் தந்த 99 பள்ளிவாயல்களில் உறுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் 142 பள்ளிவாயல்களில் எந்தவித உறுதியும் இல்லை என அறியக் கிடைத்துள்ளது. மேலும் 48 பள்ளிவாயல்கள் காணி அனுமதிப் பத்திரத்தை விண்ணப்பித்தாக தெரியவருகிறது.


இந்த வகையில் மொத்தம் 289 பள்ளிவாயல்கள் தமது அசையா சொத்துக்களின் உரிமையை ஆவணப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளன. வக்பு சபையின் சட்ட அலுவலர் இப்பள்ளிவாயல்களின் ஆவணப்படுத்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.