வழங்கப்பட்ட இலவச பாடப்புத்தகத்தினுள் இருந்த பெருந்தொகை பணத்தை பாடசாலையில் ஒப்படைத்த மாணவி!

வழங்கப்பட்ட இலவச பாடப்புத்தகத்தினுள் இருந்த பெருந்தொகை பணத்தை பாடசாலையில் ஒப்படைத்த மாணவி!

குறுநாகல்- இப்பாகமுவ முன்மாதிரிப் பாடசாலையின் தரம் ஏழில் கற்கும் மாணவி ஒருவர் தனக்கு பாடசாலையினால் வழங்கப்பட்ட இலவச பாடநூலில் இருந்த பெருந்தொகை பணத்தை தனது பாடசாலைக்கு திருப்பி ஒப்படைத்துள்ளார்.

இந்த மாணவியின் முன்னுதாரமான செயலை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டு அது தொடர்பாக தேடியறிவதற்கு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாண கட்டிடப் பொருட்கள் மற்றும் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த நேற்று (10) அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

குருநாகல், இப்பாகமுவ, வடுபொல கிராம சேவையாளர் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட இப்பாகமுவ முன்மாதிரிப் பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் தீப்தி சுபாசினி என்ற மாணவியால் தனக்கு பாடசாலையால் வழங்கப்பட்ட இலவச பாடநூலில் இருந்த ரூபா 20 ஆயிரம் பணத்தொகையை தனது வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்து, பின்னர் ஆசிரியரினால் பாடசாலை அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த முன்னுதாரமான செயலை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

அந்தப் செய்தியை பார்வையிட்ட வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சரும், பிரதம மந்திரியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின்படி இந்த முன்மாதிரியான செயலை மேற்கொண்ட பிள்ளையின் வீட்டு நிர்மாண வேலைகளை தேடிப்பார்க்க இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்கள் விரைவாக கள ஆய்வில் ஈடுபட்டார்.

இந்தப் பிள்ளை தற்போது வாழும் வீடு, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் "உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்" வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிக்கான வீடாகும். மேலும் இதன் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறுமியின் தந்தை வலது குறைந்தவர் என்பதால் நிரந்தர வருமானம் ஏதும் இல்லாததன் காரணத்தினால் இந்த வீட்டை விரைவாக நிர்மாணிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் குருநாகல் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்தச் சிறுமி செய்த முன்னுதாரணமான பணியை பாராட்டும் விதமாக இந்த கிராம சேவயாளர் பிரிவுக்கு "உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்" வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியமாக வீடு தேவைப்படும் மற்றொருவருக்கும் புதிய வீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே. சுமித், கொழும்பு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அனுத்தரா தேவி வித்தியாலங்கார, இப்பாகமுவ பிரதேச செயலாளர் வசந்தா வர்ணகுலசூரிய, இப்பாகமுவ வலயக் கல்விப் பணிப்பாளர் சிறிநிமல் பொடிநிலமே, இப்பாகமுவ முன்மாதிரிப் பாடசாலையின் பிரதி அதிபர்களான சரத் ரூபசிங்க மற்றும் பிரபாத் குணவர்தன உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.