கத்தார் - சவூதிக்கிடையில் தரை மார்க்க பொருட்கள் பரிமாற்றம் இவ்வாரம் முதல்!

கத்தார் - சவூதிக்கிடையில் தரை மார்க்க பொருட்கள் பரிமாற்றம் இவ்வாரம் முதல்!

கத்தார், சவூதி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கிடையில் நிலவி வந்த இராஜதந்திர முறுகல் நிலை கடந்த மாதம் நிறைவுற்ற நிலையில், கத்தாருக்கும் சவூதிக்கும் இடையிலான ஒரேயொரு தரை மார்க்கமான அபூ-சம்ரா (சல்வா) எல்லையூடாக பொருட்கள் (சரக்குகள்) கத்தாருக்குள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உள்வர இருப்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. 


உரிய அதிகாரிகளின் முடிவின் பின்னர் இந்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் நிலையில், பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் சுங்க பொது ஆணையம் தெரிவித்துள்ளது. 


அத்துடன் அபூ-சம்ரா எல்லையூடாக நுழைபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள், மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் போன்றவற்றை கத்தார் சுங்க பொது ஆணையம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.