முஸ்லிம் பெண்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்! -சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

முஸ்லிம் பெண்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்! -சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே


முஸ்லிம் திருமணச் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முஸ்லிம் பெண்களே எம்மிடம் முறைப்பாடுகளை முன்வைப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.


பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரரால் 27/2 கீழ் முஸ்லிம் சட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,


எமது நாட்டில் 18 வயது வரையான சிறுவர்கள் அனைவரின தும் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.


அதனால் இனம்,மதம்,குல பேதங்கள் கடந்தது அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கற்றும் சந்தர்த்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.


பெண்கள் தொடர்பிலான சர்தேச சீடா பிரகடனத்திலும் கையெழுத்திட்டுள்ளோம். அதன் பிரகாரம் பெண்கள் தொடர்பில் இனம், மதம் மற்றும் குல பேதங்கள் பார்க்கக் கூடாது.


ஒரே சட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் தமது உரிமைகளை உறுதிப்படத்த வேண்டுமென்ற கருத்தை முன்வைத்துள்ளோம்.


முஸ்லிம் திருணமச் சட்டத்தால் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முஸ்லிம் பெண்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.


ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.