இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிக்கும் திட்டம் இன்று முன்னெடுப்பு! நான்கு வீரர்கள் தோல்வி!

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிக்கும் திட்டம் இன்று முன்னெடுப்பு! நான்கு வீரர்கள் தோல்வி!

இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள விரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கபட்டது.

2 கிலோமீற்றர் தூரத்தை ஓடி கடப்பதற்கான சோதனை இவ்வாறு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று முன்னெடுக்கபட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் விளையாடுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அணியின் 36 வீரர்களுக்கு இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்க்பட்டன.

இதில் 32 வீரர்கள் பங்குப்பற்றியதாக ஶ்ரீலங்கா கெிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதில், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குனதிலக்க, டில்ருவான் பெரேரா மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் சோதனையில் தோல்வி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பின்னபற்றப்பட்டுவந்த யோ- யோ முறைமைக்கு பதிலாக இந்த புதிய உடற்தகுதி சோதனை முறைமை முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்நிலையில், 2 கிலோமீற்றர் தூரத்தை 8 நிமிமும் 35 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

இதேவேளை, பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்டவீரர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு வெவ்வேறு நேர இலக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் தோல்வியுறும் வீரர்கள் 40 நாட்களுக்குள் மீண்டும் தமது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகத்தொடருக்கு முன்னர் அணி வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதே நோக்கமாக அமைந்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உடல் செயல்திறன் தொடர்பான முகாமையாளர் கிராண்ட் லுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய சோதனையில் நான்கு வீரர்கள் பங்கேட்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அவிஸ்க்க பெர்ணன்டோ மற்றும் லஹிரு திருமான்ன ஆகியோரே இவ்வாறு இன்றைய சோதனையில் பங்கேட்காத நான்கு வீரர்கள் எனவும்  ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.