பொது சுகாதாரத்தில் மிகவும் புரக்கணிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கும் உளநலம்! ஆக்கம் - ஏ.எம். ஆயிஷா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது சுகாதாரத்தில் மிகவும் புரக்கணிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கும் உளநலம்! ஆக்கம் - ஏ.எம். ஆயிஷா


உள நலனினூடாக உன்னத வாழ்வை நோக்கிய நகர்வு


தற்காலத்தில் பலராலும் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக ‘உளநலம்’ ஒரு முக்கிய இடத்தைப் பெருகின்றது. வருடாவருடம் ஒக்டோபர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக உளநல தினமானது இந்த வருடம் மிகவும் முக்கயத்துவம் கொடுக்கப்பட்டதாக அனேக நாடுகளில் பல கருப்பொருள்களைக் அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது. காரணம் உளநலம் என்பது மனிதர்களிடையே கேள்விக்குறியாகி வரும் ஒரு விடயமாக மாறிவிட்டது. வருகின்ற சில காலங்களில் உலகில் முதன்மை வகிக்கக்கூடிய ஒரு நோயாக உளநோய் ஆகிவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு ஏதுவான பல காரணங்கள் மனிதர்களை பாதித்து வந்திருந்தாலும் பலமானதொரு அத்திவாரம் கோவிட்-19 இனால் இடப்பட்டுவிட்டதுடன் உலக யதார்த்த வாழ்வின் திசையையே மாற்றிவிட்டது. கோவிட்-19 இனால் பெருகிவரும் உடலியல் சரர்ந்த நோய்களுக்கு நிகராக அதிகரித்து வரும் உளநல பாதிப்புக்களே இதற்கான சாட்சியாகும். 


இறைவன் இவ்வுலகில் படைத்துள்ளவற்றில் ஏனைய உயிரினங்களை விட சிறப்பான மேலான படைப்பாக மனிதன் கருதப்படுகிறான். ஏனெனில் உடல், உள்ளம் மற்றம் ஆன்மா என்பவற்றை ஒருங்கே கொண்ட ஒரு பரிபூரண நிலையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். பூரணமான மனிதனின் தோற்றத்திற்கு இம்மூன்று மூலக்கூறுகளும் எவ்வளவு அவசியமோ அவ்வாறே மனிதனின் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு இம்மூலக்கூறுகளினதும் நன்நிலை அவசியமாகும். நன்நிலை என்பது திருப்தியானதும் ஆறுதலானதும் ஒரு நிலையாகும். மனிதன் ஆரோக்கியமுடையவனாக இருப்பதற்கு உடல், உள, சமூக மற்றும் ஆத்மீகம் (ஆன்மா) என்பவற்றின் நன்நிலை சமநிலையாக பேணப்பட வேண்டும். உன்னதமான வாழ்விற்காண இரகசியமே இதுதான் என்றால் மிகையாகாது.


வாழ்க்கை ஒரு வட்டம் அதில் இன்பம், துன்பம், கவலை, மகிழ்ச்சி முதலான உணர்வுகள் மாறி மாறி ஏற்படக்கூடியன. இதுவே மனித வாழ்வின் யதார்த்தம். இதேபோலத்தான் மனிதனின் வாழ்வில் பிரச்சிணைகள், நெருக்கீடுகள் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. தனக்கு ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னேறிச் செல்வதில்தான் வாழ்வின் வெற்றியுள்ளது. செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்தே அமையும் என்பதற்கிணங்க நமத செயற்பாடுகளுக்கும் நடத்தைகளுக்கம் உந்து சக்தியாக அமைவது நமது எண்ணங்களேயாகம்.


 தமது உள்ளத்தில் எப்பொழுதும் நேர்நிலையான சிந்தனைகளை கொண்டிரப்பவர்கள் தங்களுக்க பிரச்சிணைகள் ஏற்படும் போது தன்னால் முடியும் என நினைத்து இறைவன் தமக்களித்துள்ள ஆற்றல்களையும் அளுமையையும் கொண்டு சவால்களை முறியடித்து வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றனர். தன்னுள் எப்போதும் எதிர்மறையான சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள் சவால்களை கண்டு அஞ்சி அவற்றை வெற்றிக்கொள்ள முடியாமல் மென்மேலும் நெருக்கீடுகளுக்கு உள்ளாகி நிம்மதியை தொலைத்து அழுத்தங்களுக்குள்ளாகி வாழ்வில் அடுத்து என்னவென சிந்திக்க முடியாமல் தேங்கிய குட்டையாக முடங்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்வர். 


$ads={1}


மனித மூளையில் ஏற்படும் உயிரியல், இரசாயன மாற்றங்களின் விளைவினாலேயே உளநோய்கள் ஏற்படுகின்றன என்றும் அதனுடன் அவன் வாழ்கின்ற சூழல், சமூகப் பிண்ணனி என்பனவும் அதற்கு தூண்டுதலாய் அமைகின்றன என்றும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தனிமனித வாழ்க்கையில் குடும்பம், தொழில், சமூக ரீதியாக ஏற்படும் அழுத்தங்கள், இழப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், பதகளிப்பு என்பன உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருந்தபோதிலும் மனிதனுள் இயல்பாக காணப்படும் சமாளிக்கும் திறன் மனிதனின் உளநலம் பாதிப்படையாமல் சமநிலையை பேண உதவும். இருந்த போதிலும் தற்போது பெருகிவரும் கோவிட்-19 அச்சம் மனிதனின் மனபலத்தையும் தகர்த்து உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. 


பொது சுகாதாரத்தில் மிகவும் புரக்கணிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கிய உளநலம் கடந்த சில காலமாக முக்கியத்துவம் பெற்று வந்திருந்தாலும் கோவிட்-19 தொற்று ஏற்படுத்தம் மரணபயம், அச்சம், தனிமை, பதட்டம் மற்றும் வறுமை என்பன உளநோய் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் முழு மனித சமூகங்களினதும் மன ஆரோக்கியமும் நல்வாழ்வும் கேள்விக்குறியாகியுள்ளது.   அதிகரிக்கும் வீட்டுவன்முறைகள், தனிமைப்படுத்தல் ஏற்படுத்தும் மனஉளைச்சல், தொற்று காரணமாக நெருக்கமாகவர்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சம், தொற்றின் நிச்சயமற்றதன்மை மற்றும் அது பற்றி பரவும் தவறான வதந்திகள் என்பன மக்களை தமது எதிர்காலத்தை பற்றி பயம் கொள்ளச் செய்து மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி மானிட உளநலத்தை கேள்விக்குறியாகியுள்ளது.  


உடலியல் நோய்கள் உளத்தையும் உளவியல் நோய்கள் உடலையும் பாதிப்படையச் செய்யும் என்பது இயற்கையின் நியதி.


 ஆரோக்கியமானதும் நிம்மதியுமான வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைக்கும் மனிதன் தனது உடலில் ஏற்படும் நோய்களுக்கு இலட்சங்களில் செலவு செய்து வைத்தியம் செய்யவும் தயங்கமாட்டான். ஆனால் அதே தனது உள்ளம் ஆரோக்கிமாகதான் உள்ளதா என ஆராய 5 நிமிடம் அமர்ந்து சிந்திக்கவும் மாட்டான். தங்களுடைய புற அழகை பராமறிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் அகத்தையும் பராமறிக்க கொடுப்பதில்லை. உளநலமின்மையும் சிலவேளை உடல் உபாதைகளை தூண்டக்கூடும் என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். 


மனிதனின் உடலியல் தேவைகள் இவ்வுலகம் சார்ந்தும் ஆத்மீக தேவைகள் மறுமையை சார்ந்தும் இருக்கின்ற வேளையில், இவ்வுலகின்; அற்ப இன்பங்களுக்கும், மனோ இச்சைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழும் மனிதர்கள் தமது ஆத்மீக தேவைகளை நிறைவேற்ற தவறுகின்றனர். அதனால் அச்சம், பதகழிப்பு, நெருக்கீடு முதலான உளநல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். அதன் பின்னர்தான் தமது உள்ளத்தை எவ்வாறு அமைதியடையச் செய்வத என தெரியாமல் தடுமாறுவர்.  


$ads={1}


மனிதர்கள் தங்கள் வாழ்வு சிறப்பானதாக அமைய வேண்டுமென நினைத்தால்  உடலைப் போலவே உள நலனிற்கும் முக்கியத்துவமளிப்பதுடன், தங்களுடைய உள்ளங்கள் பலவீனமாக இருப்பதாக உணரும் சர்தர்ப்பங்களில்  தயக்கமின்றி அதற்கான தீர்வை நாடிச்செல்ல வேண்டும்.  சிலர் தங்களது பலவீனத்தை உணர்ந்தும் சமூகத்தில் பிறருக்கு தெரியவந்தால் கேலி, கிண்டல்களுக்குள்ளாகி மதிப்பிழந்து விடுவோமோ என அஞ்சி தமது குழப்பத்தை மனதிற்குள்ளேயே புதைக்க முயற்சிப்பதால் மென்மேலும் நெருக்கீடுகளுக்குள்ளாகி மனவடுநிலையை அடைந்துவிடுவர். அவ்வாறான நிலை முற்றும் சந்தர்ப்பத்தில் விரக்கியில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் எல்லைவரை செல்லக்கூடும். எனவே மனிதர்கள் தங்களது உடல் நலனைப் பேணுவது போன்றே உளநலனையும் பேண வேண்டும். தமது உள்ளம் ஏதாவதொரு காரணத்தினால் குழம்பியுள்ளது என்று உணர்ந்தால் அதனை பற்றியே சிந்தித்து தவிக்காமல் மனதை வேறு வேளைகளில் ஈடுபடுத்தி திசைதிருப்ப வேண்டும். 


உதாரணமாக கோவிட்-19 காரணமாக வீட்டில் அடைந்து மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றியே சிந்தித்து சிந்தித்து மனதை குழப்பிக்கொள்ளாமல் குடும்பத்துடன் நேரம் செலவிடல்,  நல்ல புத்தகங்களை வாசித்தல், தோட்ட வேலைகள், ஆக்கதிறனான விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுதல் என்பனவற்றின் மூலம்  உள்ளங்களை எண்ணங்களின் பிடியில் சிக்கித்தவிக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம். உள உணர்வுகளை சமநிலையாக பேணுவதுடன் அதற்காக  தியானம், யோகா போன்றவற்றுடன் ஆத்மீக தேவைகளை திருப்திகரமாக பூர்த்திசெய்வதன் மூலமும் உள அமைதியை ஏற்படுத்தி அதன் நலத்தை பேணமுடியும்.   


ஆர்பரிக்கும் அலைகடலை விட அமைதியான ஆழ்கடலிற்கே சக்தி அதிகம். அது போலவே எமது உள்ளங்களும் இருக்க வேண்டும். அமைதியும் ஆரோக்கியமும் பெற்ற உள்ளமே உன்னதமான வாழ்வை தரும்!


"வழித்தடம்"- All University Muslim Student Association 

ஏ.எம். ஆயிஷா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.