தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிய 21 வயது யுவதி பரிதாப மரணம்!
advertise here on top
advertise here on top

தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிய 21 வயது யுவதி பரிதாப மரணம்!


கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததன் பின்னர் வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (17) பதிவாகியுள்ளது.


பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கே.எச்.எம். சந்திமா தமயந்தி என்கிற 21 வயது யுவதியே இவ்வாறு கொரோனா வைரஸினால் உயிரிழந்திருக்கின்றார்.


பதுளை – ரிதிமாலியத்த, கெமுனுபுர பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தியத்தலாவ தன்மைப்படுத்தல் முகாமில் 10 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.


அதன்பின் இரண்டு தினங்களுக்கு முன் வீடு திரும்பியிருக்கின்றார்.


இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு 8.000 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர அம்பியூலன்ஸ் உதவியுடன் மஹியங்கனை வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


எவ்வாறாயினும் அவரது உயிரிழப்பிற்கு சுகாதார அதிகாரிகளின் கவனயீனமே காரணம் என்று உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.