பஸ் பயணத்தை புறக்கணித்து சைக்கிளில் சென்று 60 இலட்சத்தை சேமித்த அபூர்வ இலங்கையர்!
advertise here on top
advertise here on top

பஸ் பயணத்தை புறக்கணித்து சைக்கிளில் சென்று 60 இலட்சத்தை சேமித்த அபூர்வ இலங்கையர்!


இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது.


எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு 07, விஜேராமய மாவத்தையிலுள்ள ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆய்வுப் பணியகத்தில் தொழில் புரிபவர்.


வாரத்தில் 05 நாட்களிலும் அவர் வேலைநாட்களில் அலுவலகத்திற்கு வருவதற்காக பஸ் பிரயாணத்தை தவிர்த்து வருகின்றார்.


குறிப்பாக தனது சைக்கிளிலேயே அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றார். 


கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து ஹொரண – சியம்பலாகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதன்படி பார்த்தால் தினமும் அவர் 53 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணத்தில் செலவழிப்பதோடு, இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமான தூரம் சைக்கிளில் பயணம் செய்திருக்கின்றார்.


$ads={1}


1995ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சுமார் 36 வருடங்களாக அவர் இவ்வாறே தனது சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றார் என்பது ஆச்சரியம்தானே. 


அதனைவிட மிகப்பெரிய ஆச்சரியமாக செய்திதான் அவர் பஸ் பயணத்தினை தவிர்த்துக் கொண்டதால் அதற்காக செலவு செய்கின்ற பணமாக 60 இலட்சத்திற்கும் மேல் சேமிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றார்.


பீரிஸ் போதைப்பொருள், புகைத்தல் பயன்படுத்தாதவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.