இலங்கையில் பிரித்தானிய பயணத்தடை நீக்கம்!

இலங்கையில் பிரித்தானிய பயணத்தடை நீக்கம்!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானிய – இலங்கைக்கு இடையிலான பயணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு இன்று தொடக்கம் நீக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவிவருகின்ற அதேவேளை, அதில் பாதிக்கப்பட்ட சிலர் இலங்கையிலும் இனம்காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பயணத்தளர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.


புதிய கொரோனா மாறுபாட்டின் காரணமாக அரசாங்கம் பிரித்தானியாவிற்கு தற்காலிக பயணத் தடையை அறிமுகப்படுத்தியது.


இந்நிலையில் பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு PCR பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் நாட்டுக்குள் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post