வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பலவந்தமாக கொரோனா தடுப்பூசி பெற்று வழங்கியுள்ள அமைச்சர்!

வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பலவந்தமாக கொரோனா தடுப்பூசி பெற்று வழங்கியுள்ள அமைச்சர்!


அரச தரப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது வீட்டில் சேவை புரியும் இரு பெண்களுக்கு பலவந்தமாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கின்றார் எனும் தகவல் சிங்கள ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.


கடந்த திங்கட்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குறித்த இரு பெண்களையும் அழைத்துவந்த குறித்த இராஜாங்க அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பலருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு இவ்வாறு தடுப்பூசியை அவர்களுக்கும் பெற்றுக்கொடுத்துள்ளார்.


இதற்கு வைத்தியசாலை பணிக்குழாம் உட்பட பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோது உயரிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர்களின் எதிர்ப்பு தவிடுபொடியாகிவிட்டதாகவே கூறப்பட்டுள்ளது.


குறித்த இராஜாங்க அமைச்சர் வியத்மக என்கிற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்கூட்டிய பாதையை தயார்படுத்திய புத்திஜீவிகள் குழுவில் மேல் மாகாணத்திலிருந்து செயற்பட்டு பின் மேல் மாகாணத்திலேயே மொட்டுக் கட்சியில் போட்டியிட்டவர் ஆவார்.


பேராசிரியரான அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.