நான் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள மாட்டேன் - சஜித் பிரேமதாச

நான் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள மாட்டேன் - சஜித் பிரேமதாச

நாட்டில் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை எனக்கு தடுப்பூசி வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னரே நான் தடுப்பூசி பெற்றுக்கொள்வேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சரியான ஒழுங்கு முறை விதிகளை அரசாங்கம் பின்பற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு வருமாறு தொலைபேசியில் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று தீர்மானித்துள்ளேன்.

தடுப்பூசியை செலுத்திவிட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாது.

ஏனென்றால் பொது கூட்டத்தில் நாட்டு மக்களுக்காக பேசிவிட்டு இப்போது எவ்வாறு செயற்படுவது.

நான் அறிந்த வரையில் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றது.

மேலும் தடுப்பூசிகள் பெறப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இப்போது கிடைத்துள்ள 5இலட்ச தடுப்பூசியை எவ்வாறு செலுத்துவார்கள் இதற்கான ஒழுங்கு முறை மேற்கொள்ளவில்லை பொது மக்களுக்கும் இது தெரியாது .

இந்நிலையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செல்லுத்திய பின்னர் அல்லது அனைவருக்கும் செலுத்த கூடிய வகையில் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் நான் பெற்றுக்கொள்ளத் தீர்மானித் துள்ளேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post