சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த கல்முனை மாணவி பாத்திமா ஷைரீன் கெளரவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த கல்முனை மாணவி பாத்திமா ஷைரீன் கெளரவிப்பு!


சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலும் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயரியல் விஞ்ஞான (bio science) பிரிவில் கல்வி பயிலும் மாணவி இமாம் மௌலானா பாத்திமா ஷைரீன் அவர்கள் ஏ.ஆர் மன்சூர் பவுண்டேஷன் அமைப்பினரால் கௌரவிக்கப்படார் .


ஏ.ஆர் மன்சூர் பவுண்டேசனின் தலைவியும் சட்டத்தரணியுமான மர்யம் நளீமுடீன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.


சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மாணவியை கௌரவிக்கும் முகமாக முன்னாள் வர்தக வாணிபதுறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர் மன்சூர் அவர்களின் புதல்வரும் ,கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (26) நேரடியாக சென்று ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நினைவுச் சின்னம் என்பன அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.


இம் மாணவி இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம்(2020) இடம்பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் சுமார் 25 நாடுகள் பங்கேற்புடன் சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இம்மாணவி புவியியல் தொடர்பான போட்டியில் பங்குபற்றிய இவர் இதில் முதலாம் இடத்தை பெற்று சாதனை புரிந்து நமது நாட்டுக்கும் பெருமை ஈட்டித் தந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .


மேலும் இவர் பாடசாலை ரீதியாக இடம்பெற்ற தமிழ் தினம் ,ஆங்கில தினம்,மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றுக்கொண்டார்.


கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக்கொண்ட இவர் பல்துறை சாதனைகளுக்காக கல்லூரி சமூகத்தினரால் "விலைமதிப்பற்ற முத்து" எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.


மேலும் இம்மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பில் கேட்டறிந்த கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.


மேலும் சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் விஷேட நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.


$ads={1}


கல்முனை பிராந்தியத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசன் கல்விக்காக கரம் கொடுக்கும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


-எம்.என்.எம்.அப்ராஸ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.