எம்மை அடிப்படைவாதிகள் என கூறுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது! -பொதுபல சேனா

எம்மை அடிப்படைவாதிகள் என கூறுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது! -பொதுபல சேனா


பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாதிகள் என கூறுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; நாம் ஆக்ரோசமாக பேசவும் கோபப்படவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளே காரணம்.


அதுமட்டுமல்ல ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்தில் முக்கியஸ்தர் ஒருவரே மாற்றியுள்ளார், அந்த உண்மைகளை விரைவில் வெளிப்படுத்துவோம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய முடியாது, இப்போது நாம் இருக்கும் நிலையை விடவும் பலமாக அடுத்த அடி எடுத்து வைப்போம் எனவும் அவர் கூறினார்.


பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாத அமைப்பெனவும், அதனை தடைசெய்ய வேண்டும் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அது குறித்தும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் போதே இவற்றைக் கூறினார். 


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட நாம் காரணம் அல்ல, இஸ்லாமிய அமைப்புகளுடன் நாம் இணைந்து செயற்படவும் இல்லை. அவ்வாறிருக்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்யாது எம்மை தடைசெய்யக் கோருவது நியாயமானதல்ல. இந்த அறிக்கையில் எமது அமைப்பு தொடர்பில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.


நாம் பயங்கரவாதிகளும் அல்ல, எமது மக்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர். எமது மக்களை நாம் காப்பாற்ற பேசுகிறோம், அதற்காக கோபப்படுகின்றோம். அதனை அடிப்படைவாதிகளென கூறி அடிப்படைவாதிகளுடன் எம்மையும் ஒப்பிட்டு கூறுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டுக்குள் இடம்பெற்ற ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், மதமாற்ற நடவடிக்கைகளை தடுக்கவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தடுக்கும் விதமாக போராடினோம். அவ்வாறு போராடிய எம்மையே இறுதியாக அடிப்படைவாதிகளாக அடையாளப்படுத்திவிட்டனர்.


ஐ.எஸ் அமைப்பும், ஜமா-அத்தே இஸ்லாம் அமைப்பும் பொதுபல சேனா அமைப்பும் ஒன்றா? எம்மை ஏன் இலக்கு வைக்கின்றனர் என்பது எமக்கும் நன்றாக தெரியும். எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை பறித்தமையும் எம்மை இலக்கு வைத்தே என்பதை நாம் நன்றாக அறிவோம் என்றார்.


$ads={1}


நாம் கடும்போக்காக சில இடங்களில் செயற்பட்டமை உண்மையே. ஆனால் எம்மை அவ்வாறு செயற்பட வைத்தது முன்லிம்களே. முதலில் தாக்குதல் நடத்தியவர்களும், சிங்கள சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தவர்களும் முஸ்லிம்களே அவர்களிடமிருந்து எமது சமூகத்தை பாதுகாக்கவே நாம் நடவடிக்கை எடுத்தோம். அதை தவறாக கூறுவதில் நியாயம் உள்ளதா எனவும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.