எதிர்வரும் 07ஆம் திகதி கறுப்பு ஞாயிறு தினமாக அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 07ஆம் திகதி கறுப்பு ஞாயிறு தினமாக அதிரடி அறிவிப்பு!


இலங்கையில் எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.


கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இதனை அறிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி இவ்வாறு கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.


இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.