அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவை நீதியை பரிகாசம் செய்யும் நடவடிக்கை! – ராதிகா குமாரஸ்வாமி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவை நீதியை பரிகாசம் செய்யும் நடவடிக்கை! – ராதிகா குமாரஸ்வாமி


அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவை நீதியை பரிகாசம் செய்யும் நடவடிக்கை என ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்தும் விசேட விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு குறித்தும் சில விடயங்களை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.


இந்த அறிக்கையில் மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் மற்றையதை விட மோசமானவை.


முதலாவது அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு நீதிமன்றங்களில் தற்போது நடைபெறும் வழக்குகள் சிலவற்றை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.


உலக வரலாற்றில் ஆணைக்குழுக்கள் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தது இதுவே முதல்தடவை. இதன் காரணமாக லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு பிரகீத் எகலியகொட வழக்கு, வசந்த கரணாகொட வழக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். இது முற்றிலும் வழமைக்கு மாறான விடயம்.


இரண்டாவதாக அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு இந்த வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்கப்படப்போகின்றது, மேலும் பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளை போலியான ஆதாரங்களை உருவாக்கியமைக்காக நீதி நடவடிக்கைகளிற்கு உட்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றது.


இவை சர்வதேச கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான வழக்குகள் – குறியீடாக காணப்படும் வழக்குகள்.


இந்த தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் என்பது எங்கள் சட்டத்தின் ஆட்சியில் முற்றிலும் முன்னொரு போதும் இல்லாத இருளாகும்.


மூன்றாவது அரசியல் தலைவர்களின் சிவில் உரிமையை பறிப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.


இது 1977 இல் திருமதி பண்டாரநாயக்கவிற்கு நடைபெற்றதை போன்றது.


மகிந்த ராஜபக்ஷ உறுப்பினராகயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிவில் சமூகத்துடன் இணைந்து அன்று அந்த ஆணைக்குழுவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது ஒரே குரலில் பேசியது.


பேராயர் லக்ஷமன் விக்கிரமசிங்க ஜே.ஆரை ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என மன்றாடும் தனது பிரபலமான கடிதத்தை எழுதினார்.


எங்களின் தற்போதைய அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசேட விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவும் நீதியை பரிகாசம் செய்யும்.நடவடிக்கையாகும்.


சட்டத்தின் ஆட்சியின் மீதும் மக்களிற்கான நீதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களிற்கு இது ஒரு பயங்கரமான நிலையாகும். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.