
ஒன்ராறியோவை சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்பவரே இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார். இவர் Never Have I Ever என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த தொடரில் நடிக்கும் மைத்ரேயி, ஒரு முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக நடிக்கிறார்.
15,000 பேர் பங்கேற்ற ஒரு நேர்காணலில், 19 வயதான மைத்ரேயி அந்த கதாபாத்திரத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரும் தொடரின் இணை தயாரிப்பாளருமான Mindy Kaling கூறும்போது,
மைத்ரேயியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு ஜாலியான குட்டிப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கும்.
எனினும், அவரை திரையில் பார்க்கும்போது தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கும் ஒரு பெரிய கலைஞரை பார்க்கும் ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்கிறார்.
