கொரோனா தொற்றாளர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம்!

கொரோனா தொற்றாளர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம்!

அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களை மையங்களில் தனிமைப்படுத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையை 14 இல் இருந்து 10 நாட்களாகக் குறைக்க சுகாதார அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.

மீதமுள்ள 4 நாட்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்களின் பி.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த 10 நாட்கள் கணிக்கப்படுகின்றன.

தற்போது, ​​சில கொரோனா தொற்றாளர்கள் 4 அல்லது 5 நாட்களுக்குப் பின்பே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (07) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு தெரிவித்தார். 

“கொரோனா தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து கொரோனா வைரஸ் பரவும் அபாயம் 10 நாட்களுக்குப் பிறகு மிகக் குறைவு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆபத்தான 10 நாட்களில் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைப்போம். அடுத்த 4 நாட்களில் அவர்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். 

இருப்பினும், தற்போது ஒரு சிக்கல் உள்ளது, பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகிவிடும் பச்சத்தில், கொரோனா தொற்றாளர் 10 நாட்களையும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருக்க மாட்டார். இவ்வாறான சூழ்நிலையை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.