யுத்த குற்றம் புரிந்துள்ளதாக தமிழ் பிரிவினைவாதிகளால் நிரூபிக்க முடியாமல் போயுள்ளது! -உதய கம்மன்பில

யுத்த குற்றம் புரிந்துள்ளதாக தமிழ் பிரிவினைவாதிகளால் நிரூபிக்க முடியாமல் போயுள்ளது! -உதய கம்மன்பில

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா யுத்த குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கின்ற தமிழ் பிரிவினைவாதிகளினால் கடந்த 12 ஆண்டு காலமாக உரிய ஆதாராங்களை வைத்து அதனை நிரூபிக்க முடியாது போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக கடற்படையில் பணியாற்றிய சரத் வீரசேகர நியமிக்கப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த பொதுத் தேர்தலில் 3 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகளினால் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். பொதுமக்களின் அமோக ஆதரவினால் நாடாளுமன்றுக்கு தெரிவான ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினால் விமர்சிக்கப்படுகின்றமை நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் பாரிய தாக்கம் செலுத்தும் விடயமாகும்.

ஷவேந்திர சில்வா யுத்த குற்றம் புரிந்துள்ளதாக தெரிவிக்கின்ற தமிழ் பிரிவினைவாதிகளினால் கடந்த 12 ஆண்டு காலமாக உரிய ஆதாராங்களை வைத்து அதனை நிரூபிக்க முடியாது போயுள்ளது என்றார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.