இலங்கையிலிருந்து கத்தார் நாட்டுக்கு பயணிக்க இருப்போருக்கான அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையிலிருந்து கத்தார் நாட்டுக்கு பயணிக்க இருப்போருக்கான அறிவுறுத்தல்!


நாட்டில் இருந்து கத்தார் நோக்கி வேலை நிமிர்த்தம் பயணிக்க இருப்பவர்கள் இலங்கை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.

1. PCR Test (Negative)
2. Exceptional Entry Permit
3. Confirmed Air Ticket
4. Hotel Booking for Quarantine 
5. Filled Consent Form (அனுமதி பத்திரம்)

மேலும் நாட்டில் PCR பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகள்.

1. Nawaloka Hospital
2. Lanka Hospital 
3. Asiri Surgical Hospital
4. Durdans Hospital

நீங்கள் PCR எடுக்கவேண்டுமென்றால் உங்கள் Departure தினத்திற்கு 2 நாட்கள் முன்பே PCR Test க்கான Sample கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுத்தால் 24 மணித்தியாலத்தின் பின்பே உங்கள் Result கிடைக்கும்.

நீங்கள் நினைப்பது போன்று PCR Test சம்பந்தமாக பயப்பட வேண்டிய அவசியமில்லை, மூக்கினுள் பின்சுவர் வரைக்கும் அதை நுழைப்பார்கள் என்பதெல்லாம் வதந்தி; வெறுமனே 1.5 அங்குலம் வரைக்கும் சிறிதாக நுழைக்கப்படும். 

கட்டாயமாக அடுத்து உங்கள் PCR இலிருந்து Copy ஒன்றும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, கட்டாயமாக Online Check in ஆகிக்கொள்வது மிகவும் சிறந்தது.

5 அல்லது 6 மணித்தியாலங்களுக்கு முன் விமான நிலையம் செல்லவேணுமென்ற அவசியமே இல்லை வழமைபோல் 3 மணித்தியால இடைவெளி வைத்துச்சென்றால் போதுமானது.

விமான நிலையத்தில் வழமைக்கு மாறாக வேறெந்த மாற்றமுமில்லை. 

இதனைத்தவிர Mask, Face Protection, Social Distance - ஒரு ஆசனம் விட்டு ஒரு ஆசனத்தில் நீங்கள் அமர முடியும்.

கத்தார் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதன் பின்னர்,

1. உங்களிடம் கத்தார் நாட்டு சிம் அட்டை இருக்க வேண்டும் இல்லாவிட்டால் உடனே அவ்விடத்தில் வாங்கமுடியும் (QR. 35)

2. EHTERAZ ஆப் இனை மொபைலில் பதிவிறக்கி setup செய்துகொள்ள வேண்டும்.

3. உங்கள் EHTERAZ Check பன்னப்படும்.

4. Entry Permit பரிசோதிக்கப்பட்டு அதில் Red Label ஒட்டப்படும். (High risk country) 

5. அதன்பின் வழமைபோல் Imigration, வழமைபோல் Baggage Collection, அதன்பின் நேரடியாக Hotel Booking Counter இல் உங்களுக்கான ஹோட்டல் உறுதி செய்யப்பட்டு உங்களுக்கான வாகனத்தில் அனுப்பி வைக்கப்படும்.

நண்பர்களோ உறவினர்களோ நம்மை பார்க்கவோ நம்மிடமுள்ள பொதிகளை பெற்றுக்கொள்ளவோ முடியாது, இது வழமைக்கு மாறான ஒரு Exit வழியாக இருக்கும்,  நீங்கள் ஹோட்டல் சொல்லும்  வாகனத்தில் கூடுதலாக 2 பேர் மாத்திரமே கொண்டுசெல்லப்படும்.

ஹோட்டலில் உங்கள் தரவுகளை பெற்றுக் கொண்ட பின்னர் உங்களுக்கான அறை வழங்கப்படும். அதிலிருந்து நீங்கள் வெளியே செல்ல முடியாது.

சரியாக 5 ஆவது நாள் மீண்டும் உங்களுக்கு ஒரு PCR Test எடுக்கப்படும். 6ஆவது நாள் Result வரும்; அதுவும் Negative என்றால் 7ஆவது நாள் Home Quarantine form நிரப்பி Sign வைத்துவிட்டு உங்கள் சொந்தச் செலவில் உங்கள் வீடு/தங்குமிடத்துக்கு திரும்ப முடியும். அதன் பின்னர் மீண்டும் அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.